எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!

0
67
Never leave women anywhere! What kind of cruelty is this? Where is the peace!
Never leave women anywhere! What kind of cruelty is this? Where is the peace!

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!

எந்த காலத்திலும் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் பெண்களை வீட்டிற்குள் வைத்து வெளியே அனுப்பாமல் இருந்தனர்.

காலப்போக்கில் பெண்கள் பலர் அவர்களின் விடுதலைக்கு பாடுபட்டு சம உரிமைக்காக போராடி, பல இன்னல்களை சந்தித்து பெண்கள் வெளியே சுதந்திரமாக போய் வருகின்றனர்.

என்ன ஆனாலும் சரி பெண்கள் தானே என்ற எண்ணம் அனைத்து மக்களிடமும் வெளிப்படையாகவே இருக்கிறது.ஒரு வீட்டில் பெற்றோர் கூட ஆண் பிள்ளைக்கு தனி இடமும், பெண் பிள்ளைகளுக்கு தனி இடமும் கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளும் பல விதங்களில் நடந்தேறியுள்ளது மன வருத்தத்தை கொடுக்கிறது.

ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கவில்லை என்றாலும், காதலித்தாலும், அலுவலங்களிலும், பொது இடங்களிலும், வேறு உறவினர்கள் வீட்டிலும், நம்பி நாம் பழகும் பலரும் பெண்களிடமும் சிறு குழந்தைகளிடமும் மிக தவறான முறையிலும், கடத்தி சென்றும், பெண்களை துன்புறுத்தியும், பாலியல் வன்கொடுமை செய்தும் வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது கொரோனாவின் கொடுமையான காலத்திலும்,இந்த மாறி செய்வோரை என்ன செய்வது என்றே தெரியவில்லை.நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாகும் வரை இவர்களை போன்ற கேடுகெட்ட ஆசாமிகள் திருந்த மாட்டார்கள்.

பீகாரில், ஒரு ஊரான பாகல்பூரில்,தனியார் மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டு ஒரு பெண்ணின் கணவரும், அந்த பெண்ணின் தாயாரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய அந்த பெண்ணும் அங்கேயே தங்கி உள்ளார்.இந்நிலையில் அதே மருத்துவமனையில், கொரோனா வார்டில் ஊழியராக இருக்கும் ஜோதி குமார் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த விவகாரமானது சமூக ஊடகங்களில் வெளி வந்து வைரலாக பார்க்கப்பட்டது.இதை கவனத்தில் எடுத்து கொண்ட பத்ராகர் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த தனியார் மருத்துவமனை கோரோனோ வார்டு ஊழியனை கைது செய்தனர்.

தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.கடந்த வாரத்தில் மட்டும்  மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் கொரோனா நோயாளியிடம் இந்த மாறி பாலியல் துன்புருத்தலில் ஈடுபட்ட 2 வார்டு ஊழியர்களை இந்தூர் நகர போலீசார் கைது செய்து உள்ளனர்.