எலேய் உன்னை பத்தி தெரியாதா! அப்பாவு பாய்ச்சல்!

0
72

திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு இந்நிலையில் அந்த கட்சி இடையே நல்லை மாவட்ட நிர்வாகிகள் நடத்திய கலாட்டா அறிவாலயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ என்று பதறிப் போய் இருக்கிறார்கள் நிர்வாகிகள்.

திமுகவில் மாவட்டங்களை அடுத்து தற்சமயம் மூன்றின் கடைபிடித்து வருகிறார்கள் முன்னரே பதவியில் இருக்கும் ஒன்றிய செயலாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் அதேபோன்று புதிதாக பொறுப்பிற்கு வந்த நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததால், அந்தந்த பகுதியில் சில கோஷ்டி பூசல் ஏற்பட்டு வருகின்றது இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும் இடங்களை சார்ந்தவர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு சமாதானம் செய்யும் பொறுப்பானது திமுகவின் முதன்மை செயலாளர் கே.என் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த வகையிலே நெல்லை கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தை பிரிப்பது குறித்த ஆலோசனை கே. என். நேரு முன்பாக நடந்தது இப்போதைய திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் தான் வள்ளியூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகின்றார். இவருக்கு போட்டியாக வர்த்தக அணி துணைத் தலைவர் கிரகாம்பெல் இருந்து வருகின்றார் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அவர்களும் ஞானதிரவியம் அவர்களும் வேண்டாவெறுப்பாக நட்புடன் இருந்து வருகிறார்கள்.

அந்த ஒன்றியத்தை பிரிப்பதற்கு ஒரு நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட ஞானதிரவியம் புதிய ஒன்றியத்திற்கு தான் முன்னிறுத்தும் நபரையே செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று நேரிடும் தெரிவிக்க இதற்கு கிரகாம்பெல் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய ஆளையே இந்த பொறுப்பிற்கு நியமிக்க வேண்டும் என்று அவரும் தெரிவிக்க, ஞானதிரவியத்திற்கு ஆதரவாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு கருத்து தெரிவித்திருக்கின்றார். ஒரு சில நிமிடங்களிலேயே அறிவாலயம் அதிர்ந்து போகும் அளவிற்கு வார்த்தை யுத்தம் வெடித்து இருக்கின்றது. உன்னைப் பற்றி தெரியாதா என்பதில் ஆரம்பித்து நெல்லை தமிழில் சில தகாத வார்த்தைகளை இரு தரப்பினரும் பயன்படுத்திப் பேச இதைக் கேட்ட கே என் நேரு பயங்கர கோபம் அடைந்து விட்டாராம், கடைசியாக அவர் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு பெரிய சத்தமிட அதன் பின்னரே அமைதி நிலவி இருக்கின்றது. சிறிதுநேரம் தன்னுடைய அறைக்குள் சென்ற கே என் நேரு இந்த பிரச்சனை பற்றி ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசி இருக்கின்றார்.

கடைசியாக வள்ளியூர் ஒன்றியம் வடக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றியம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒன்றியத்திற்கு ஞானதிரவியமே செயலாளராக தொடர்கின்றார் புதிய ஒன்றியத்திற்கு கிரகாம்பெல் தெரிவித்த நபரை அறிவிக்காமல் அவருடைய பெயரையே மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பரிந்துரை செய்து இருக்கின்றார். இது என்ன புது சர்ச்சை என்று கேள்வி எழுப்பினால் இது கிரகாம்பெல் அவர்களை உள்ளூர் அரசியலிலேயே முடக்கி வைப்பதற்கான திட்டம் என்று தெரிவிக்கிறார்கள் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள்.