மே 7 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு! தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட முக்கிய தகவல்!

0
175
NEET exam will be held on 7th May! Important information published by the National Examinations Agency!
NEET exam will be held on 7th May! Important information published by the National Examinations Agency!

மே 7 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு! தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட முக்கிய தகவல்!

நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வின் மூலம் தான் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர், மேலும் ராணுவ செவிலியர் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அந்த வகையில் 2023 24 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக  நீட் தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம்,ஹிந்தி  உள்பட 13 மொழிகளில் வரும் மே மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு மூன்று மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

தகுதியானவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் ஆறாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ 6700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 6600, எஸ்டி மற்றும் எஸ்சி  பிரிவினருக்கு ரூ 1000 என்ற அடிப்படையில் இந்திய மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட நூறு அதிகம். மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணமும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 9500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டி சேவை கட்டணம் வசூல் செய்யப்படும். இது குறித்து கூடுதல் தகவல் பெற https: //nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K