இதை உடனே தொடங்குங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
78

நீலகிரி மாவட்டத்தை சார்ந்த ஜெயா என்ற மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று அதன் காரணமாக, தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். அதேபோல தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த துளசி என்ற மாணவி 2020 ஆம் வருடம் நீட் நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி அதன் காரணமாக, இந்த வருடம் தனியார் பள்ளியில் இருக்கின்ற நீட் நுழைவுத் தேர்வு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் மருத்துவ படிப்பில் சேர இயலாத சூழ்நிலையில், தனியார் பயிற்சி நிறுவனம் சான்றிதழை தர மறுத்த காரணமாக, மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன், மாணவிகளின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

மாணவ-மாணவிகள் எந்தவிதமான முடிவையும் அவசரகதியில் எடுத்து விடாதீர்கள், உலகம் மிகவும் பெரியது அன்பான தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமே இழந்தவர்கள், பொருளாதாரரீதியாக துன்பப்படுபவர்கள் என்று பல்வேறு விதத்தில் தினசரி வாழ்வில் உங்களை விட பல மடங்கு மிகவும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், மிகுந்த மன வலிமையுடன் தங்களுக்கு உள்ளன குறைகளையே வெளியில் காட்டாமல் வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர்கள் தொடர்பான வாழ்க்கை வரலாற்றை படித்து நீங்கள் மன உறுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அவர்களைப்போல வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஜெயலலிதாவின் அரசு அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் விதத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு மாணவியின் தந்தை உரையாற்றியபோது இனி என்னுடைய குடும்பத்தை நான் பசிக்கும் பகுதியின் மக்கள் இனி டாக்டர் குடும்பம் என்று பெருமையுடன் அழைப்பார்கள் என்று நெகிழ்ச்சியுடன் உரையாற்றியதை நினைவு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக தேர்தல் நடைபெற்றபோது மற்றும் அதற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உண்மையான சூழ்நிலையை மாணவர்களிடம் சொல்லாமல் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும், மீண்டும், நுழைவுத்தேர்வை அரசியல் ஆக்கியதே மாணவ-மாணவிகளின் இது போன்ற மன உளைச்சலுக்கு முக்கிய காரணம். இனி வரும் காலங்களிலாவது மாணவர்களிடம் நுழைவு தேர்வின் உண்மையான நிலையை தெரிவித்து நீட் தேர்வை ரத்து செய்யும் வரையில் நீட் சிறப்புப் பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு தஞ்சாவூர் மாணவி துளசியின் பள்ளி சான்றிதழை திரும்ப வழங்காத தனியார் நிறுவனத்தின் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், நான் வலியுறுத்துகிறேன். இந்த அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிர் நீத்த மாணவ மாணவிகளின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று இந்த அரசை நாம் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.