நீட் தேர்வு விலக்கு மசோதா! மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

0
130

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு திமுக ஆரம்பத்திலிருந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது. அதோடு இன்று நீட் தேர்வு பயம் காரணமாக, பல உயிர்கள் பலியாகினர்.இதற்கும் திமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து விட்டால் நீட்தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா? என்பதை தெரிந்து கொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது தமிழக அரசு.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட அந்த குழு பல்வேறு கோணங்களில் ஆய்வுகளை முன்னெடுத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதில் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வால் பாதிப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

நீதிபதி ஏ கே ராஜன் குழு அறிக்கை ஏற்புடையது என்று அரசுக்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு அறிக்கை அனுப்பி வைத்தது.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கும் இதமாக மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட மசோதாவை சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இந்த மசோதாவை பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்து அவையை விட்டு வெளிநடப்பு செய்ததை அடுத்து சட்டசபையில் அந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் அந்த மசோதா 142 நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன்பிறகு அதன் மீது சில கேள்விகளை எழுப்பி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து சபாநாயகருக்கு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உடனடியாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் சிறப்பு சட்ட சபையை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில், பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்ட மசோதா மறுபடியும் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில், கடந்த 14ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காததை ஒரு காரணமாகக் காட்டி தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பு செய்தது.

இதற்கு நடுவே நீட் விலக்கு குறித்து ஜனாதிபதி பிரதமர் ஆளுநர் உள்ளிட்டோரை சந்தித்து சமயத்தில் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், நேற்றுப் பிற்பகல் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவில் சுவைத்து வரும் நீட் தேர்வில் இருந்து நம்முடைய மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பற்றி நீங்கள் எல்லோரும் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

இதன் முதல் படியாக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த மன்றத்தில் வருவதாக நிறைவேற்றிய நீட் விலக்கு குறித்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்யுமாறு கூறியவுடன் அதுகுறித்து அனைத்து சட்டசபை கட்சி கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதம் செய்து சில தங்களுக்குள்ளாகவே ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு உகந்த வகையில் ஆளுநருக்கு மறுபடியும் அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து மேலும் தாமதமில்லாமல் இந்த சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும், சந்தித்து இந்த சட்ட மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன் என தெரிவித்திருக்கிறார்.

அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் மனு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த தொடர் முயற்சியின் காரணமாக, ஒரு வரலாற்று நிகழ்வாக நம்முடைய சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்திருக்கிறார் என்ற தகவலை ஆளுநரின் செயலாளர் சில மணி நேரங்களுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி மூலமாக தெரிவித்திருக்கிறார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.