நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

0
95
Need Exemption Bill Matters! Chief who has invited parties!
Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று முடிந்தது. இது பல திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதனை அடுத்து இன்று இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. முதலில் மறைந்த முன்னாள் கவர்னர் ரோசய்யா மற்றும் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி முதல்முறையாக இந்த சட்டமன்ற பேரவை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. முதலில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி கேள்விகளை எழுப்பினார். முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எம்எல்ஏ கருணாநிதி கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீடிப்பதற்கான திட்டத்தின் அறிக்கை ஆய்வில் உள்ளதாக கூறினார். அதனையடுத்து முகஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் உரையாற்றினார். அதில் அவர் கூறியது, மத்திய அரசு நீட் தேர்வை விலக்கு அளிக்கும் வரை தமிழகம் ஒருபோதும் ஓயாது. எக்ஸ் வீடியோ நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி முன்பு நடைமுறையில் இருந்ததை போல 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். எந்த ஒரு கல்லூரியில் சேர்வதற்கும் நுழைவுத்தேர்வு என்று ஒன்று இருந்தால் அது ஏழை எளிய மாணவர்களை அதிக அளவு பாதிக்கும் என்று தெரிவித்தார். தற்பொழுது நீட் தேர்வை விளக்கு மசோதாவானது ஜனாதிபதி ஒப்புதலுக்கு இன்றும் அனுப்பப்படவில்லை. ஜனாதிபதியிடம் டி ஆர் பாலு தலைமையிலான குழு மனு அளித்துள்ளது என்று கூறினார். மேலும் அனைத்து கட்சி குழுவினர் சந்திக்க உள்துறை அமைச்சர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் அனைத்துக்கட்சி குழுவினரை சந்திக்க மறுத்ததால் தனது அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நீட் விவகாரத்தால் மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. மத்திய அரசு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அனைத்துகட்சி கூட்டமும் சேர்ந்து எடுக்க வேண்டும். அதனால் நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.