கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை!

0
173
#image_title

கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை!

கல்லீரலை சுத்தமாக்கி கல்லீரல் பாதிப்பை சரி செய்ய என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

நம்ம உடம்பில் மிகவும் முக்கியமான உறுப்பாக கல்லீரல் பயன்படுகிறது. இது நம் உடம்பில் சர்க்கரை, கொழுப்பு ,இரும்புச்சத்து, போன்றவைகளை கட்டுப்படுத்தி சரியாக வைக்க உதவுகிறது. இந்த கல்லீரலானது பாதிக்கப்பட்டால் எந்த விதமான அறிகுறிகள் தோன்றும் என்றால் வாயில் கசப்பு தன்மை , வாய் துர்நாற்றம், சிறுநீரகம் கழிக்கும் பொழுது மஞ்சள் நிறமாக காணப்படும், அடிவயிற்றில் வீக்கம், இருக்கும் உடலில் திட்டு திட்டாக வெள்ளை நிறத்தில் தேம்பல் உண்டாகும். குறிப்பாக கண்ணைச் சுற்றி கருவளையம் உண்டாகும். உடல் எடை குறையும். இது போன்ற அறிகுறிகள் காணப்படும். கல்லீரல் பாதிப்பை எவ்வாறு சரி செய்வது என்பதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு புதினா ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தலை, ஓமவள்ளி இலை 1 ,இந்த மூன்று இலைகளையும் அந்த தண்ணீரில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து சரியாக 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு மிதமான சூட்டில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனுடன் பாதி அளவு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பு அல்லது தேனை கலந்து கொள்ள வேண்டும். காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் குடித்துவிட்டு பிறகு இதனை குடிக்க வேண்டும் இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கல்லீரலில் உள்ள கழிவுகள் மற்றும் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

author avatar
Parthipan K