நயினார் நாகேந்திரன் தெரிவித்த அந்த வார்த்தை! சட்டசபையில் எழுந்த சிரிப்பலை!

0
97

பாரதிய ஜனதா கட்சி வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களைப் பெற்று சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. அது அந்த கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற அந்தக் கட்சியின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க 4 சட்ட சபை உறுப்பினர்களை வைத்திருந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பல விஷயங்களில் அதிமுகவை தவிர்த்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியை குறிவைத்து பல குறைகளை திமுக சொல்லி வருகிறது. இதிலிருந்தே தெரிந்து விட்டது திமுக பாஜகவை கண்டு எவ்வளவு பயந்து போயிருக்கிறது என்பது.அதோடு மட்டுமல்லாமல் எப்போதும் இந்து மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவும், செயல்படும் திமுக தற்போது ஆட்சிக்கு வந்த காலம் முதல் இந்துக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது அனைத்து கட்சியினர் இடையையும் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றாலும் அதனை உற்றுநோக்கினால் அதனுள் அரசியல் இருப்பது நன்றாக தெரியும்.

இந்தநிலையில், சட்டசபையில் நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் சபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றும்போது சபாநாயகர் இதையே குறித்து பேசி கிண்டல் செய்ததால் சட்டசபையில் கலகலப்பு உண்டானது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி ஆரம்பித்து சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. பல முக்கிய அறிவிப்புகள் அந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு சட்டத் திருத்த முன்வடிவு என்று சட்டசபை மிக பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அவருடைய இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்னர் பாஜகவின் சட்டசபை உறுப்பினரும் அந்தக் கட்சியின் சட்டமன்ற தலைவருமான நைனார் நாகேந்திரன் உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுத்தார். அப்போது உரையாற்றிய நயினார் நாகேந்திரன் இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் கிடையாது என கூறினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து உரையாற்றிய சபாநாயகர் இந்தச் சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமா ? என கேள்வி எழுப்பினார் இதன் காரணமாக, அங்கே கலகலப்பும், சிரிப்பலையும் எழுந்தது.உடனடியாக நயினார் நாகேந்திரன் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் என்று தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து உரையாற்றினார். அந்த சமயத்தில் தவறுதலாக மத்திய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியதால் இது சபாநாயகர் அப்பாவுக்கு தோதாக மாறிவிட்டது.

உடனே சபாநாயகர் அதைத்தான் நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் நன்றி என தெரிவித்ததால் சட்டசபையில் சிரிப்பொலி எழுந்தது. இதன்பின்னர் தவறாக குறிப்பிட்டு இருக்கின்றேன் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்தார்.. அப்போது பாஜக சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.மறுபடியும் குறுக்கிட்டு உரையாற்றிய சபாநாயகர் உங்களை தனியாக விட்டுவிட்டு உங்களுடைய கட்சியினர் வெளிநடப்பு செய்து விட்டார்களே? என்று கிண்டல் செய்ததும் சட்டசபையில் கலகலப்பு ஏற்பட்டது.