நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினியின் அண்ணாத்த பாடல் வெளியீடு.!!

0
206

அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா டூயட் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா டூயட் பாடும் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடகர் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.