வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டும் என்றால் வீட்டிலேயே இயற்கையான வைத்தியம் செய்யலாம்!!

0
155
#image_title

வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டும் என்றால் வீட்டிலேயே இயற்கையான வைத்தியம் செய்யலாம்!!

கருமையான கூந்தல் நிறம் போரடித்து போய் பல விதமான பிரவுன், லெசான சிவப்பு ஆகிய நிறங்களில் கூந்தல் இருப்பது பலருக்கும் பிடிக்கிறது. இதற்கு இயற்கையாக நிறங்களை தரும் டைக்களை உபயோகிப்பது சிறந்தது. தலைமுடியைப் பற்றி இளைஞர்களும் கவலைப்படும் காலம் இது. நரை முடி இளம் வயதினருக்கும் வந்துவிட்டது என்பது இன்றைய மாறிவரும் சூழலில் கவலை தரும் விஷயம்‌.

மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை சாற்றினை பருகி வந்தால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.

எலுமிச்சை முடிக்கு பல வழிகளில் பயன்படுகிறது. இவ்வாறு எலுமிச்சையை பயன்படுத்தினால் முடி கருப்பாக மாறுவதுடன் பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். எலுமிச்சையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முடியை கருமையாகவும் பட்டுப் போல் மென்மையாக மாற்றும்.

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெயின் உதவியுடன், முடி நரைப்பதை நிறுத்தலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு வெள்ளை முடி செல்களில் உருவாகத் தொடங்குகிறது. எனவே, தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலை முதல் முடி வரை தடவவும். இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் சீராகி வெள்ளை முடி கருப்பாக மாறும்.

author avatar
Selvarani