அமெரிக்காவை சோதிக்கும் இயற்கை சீற்றங்கள்?

0
201

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் அமெரிக்காவில் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. தினமும் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு புயல் ஒன்று உருவாகி உள்ளது. லோரோ என்ற புயலானது தற்போது சூறாவளியாக மாறியுள்ளது. அந்த சூறாவளியானது டெக்ஸஸ் அல்லது லூசியானா கடற்கரையில் அது இன்று கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

author avatar
Parthipan K