விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

0
70

நாடுமுழுவதும் இருக்கின்ற மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 3ஆம் தேதியான நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருக்கிற செய்தி ஒன்றில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து சென்ற இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் அனைவரும் போராடி வருகிறார்கள். அதேபோல மின்சார திருத்தச்சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஆனாலும் அதனை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயம் மத்திய அரசு மின்சார திருத்தச்சட்டத்தை நிறுத்தி வைக்கப்போவதாக தெரிவித்திருந்தாலும், சட்டத்தில் இருக்கிற சில குறைபாடுகளை உபயோகப்படுத்தி மின்சார உற்பத்தி செய்வதையும், வினியோகம் செய்வதையும், தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்த அவர்கள், தமிழ்நாட்டில் தனியாரிடம் அதிகமான விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்காக மட்டுமே மின்வாரியத்தில் வரக்கூடிய லாபம் அனைத்தும் செலவிடப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள். மின்வாரியம் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டால் நம்முடைய விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், மின்சாரம் ஒரு சந்தையில் விற்கப்படும் பொருளாக மாறி விடும். ஆகவே மின்சார சட்டத் திருத்தத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதனை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி நாடு முழுவதிலும் இருக்கின்ற மின்சாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே விவசாயிகளின் போராட்டத்தால் விழிபிதுங்கி இருக்கும் மத்திய அரசு, தற்சமயம் மின்சார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மண்டையைப் பிய்த்துக் கொண்டு திரிவதாக சொல்கிறார்கள். இதற்கு உடனடியாக ஏதேனும் ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் விவசாயம் அழிவதற்கான ஒரு ஆரம்பப்பள்ளி தான் மின்சார துறையை தனியாரிடம் தாரை வார்க்கப்படும் இந்தத் திட்டம் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆகவே எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் மின்சாரத்துறை என்பது அரசுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அதன் வழியாக ஏழை எளிய மக்களும் விவசாயிகளும் பயன் பெற முடியும். அது தனியாருக்கு சென்று விட்டாள் அவர்கள் நிர்ணயம் செய்வது தான் கட்டணம் என்றாகிவிடும். இப்பொழுது விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் நிறுத்த படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே ஏழை எளிய மக்களின் மன எண்ணத்தை கருத்தில் கொண்டும் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.