தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

0
147
#image_title

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு. தமிழ்நாட்டின் மிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் சமீபத்திய ஆய்வில் 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அதிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (NCAP) என்பது 122 நகரங்களில் சிறந்த காற்றின் தரத்திற்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாகும், கடந்த 2019 இல் தொடங்கப்பட்ட இத்திட்டம் நாடு தழுவிய அளவில் 122 நகரங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

நடப்பாண்டில் காற்றின் மாசு குறித்து இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தில் காற்று மாசு வீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒன்பது காற்றின் தர கண்காணிப்பாளர்கள் மற்றும் மத்திய வாரியத்தின் மூன்று கண்காணிப்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் காற்று மாசு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மிகவும் மாசுபட்ட இடமாக ஒரு கன மீட்டருக்கு 15 மைக்ரோ கிராம் விட அதிகமாக ஆலந்தூரில் காற்று மாசு கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் பேருந்து பணிமனையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவு படி சாராசரியாக PM 10 நுண்துகளின் அளவு 102 ஆக கண்டறியப்பட்டுள்ளது , இது காற்றின் தரக் குறியீட்டில் மோசமான நிலையாக பார்க்கப்படுகிறது.

இவை தவிர பெருங்குடியில் காற்று தரக் குறியீடு 89 ஆகவும் , எண்ணூரில் காற்று தரக்குறியீடு 81 ஆகவும் , கொடுங்கையூர் மற்றும் அரும்பாக்கத்தில் தலா 75 ஆகவும் , வேளச்சேரியில் 70 ஆகவும் , மணலியில் 67 ஆகவும் , ராயபுரத்தில் 63 ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை திருச்சி மதுரை மட்டும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரத்தை அதிகரிப்பதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வாகன உமிழ்வை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிஎன்ஜி , எல்என்ஜி பேருந்துகள் அறிமுகம், இ-வாகனங்களை அதிகரிப்பு , பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துதல், மோட்டார் அல்லாத போக்குவரத்தை அறிமுகப்படுத்துதல், சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பாதசாரிகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை முன்னுரிமை அளிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Savitha