தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம்

0
173

தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம்

ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கும் இடம் வனமாக இருந்துள்ளது. அதில் சதுப்பு நிலத்தில் வளரக்கூடிய ஒருவரகை மரம் அடர்த்தியாக இருந்தது. அந்த மரத்திற்கு பெயர் தில்லை மரம், அதனாலேயே சிதம்பரம் நகரின் பண்டைய பெயர் தில்லை என்று வழங்கப்படுகிறது.

கோயில் புராணத்தின் கூற்றுப்படி கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் என்று அறிய முடிகிறது. நடராஜர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களுள் ஆகாய ஸ்தலமாகும்.

பெரும்பாலான கோயில்களில் எம்பெருமான் ஈசன் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் இங்கு நடன கோலத்தில் காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயில் உருவான கதை;

கௌட தேசத்தில் பிறந்த இரண்ய வர்மன் எனும் க்ஷத்ரிய இளவரசன் தற்கொலை செய்வதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிறான். அவன் இரவு வேளையில் குதிரையில் புறப்பட்டு வரும் போது ஒரு சொறி நாயும் பின்னாலேயே வருகிறது.

இவன் வெளியேற காரணம் அந்த நாட்டின் அரசர் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் இரண்ய வர்மன் தன் உடலில் குற்றம் இருந்ததால் தனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று முடிவு செய்து இரவில் வெளியேறுகிறார்.

இரவில் புறப்பட்ட இளவரசன் விடியும் போது தில்லை வனத்தை வந்தடைந்தார். அந்த வனத்திற்கு நடுவில் ஒரு லிங்கம் இருந்தது, அதன் அருகே வியாக்ரபாத முனிவர் தியானத்தில் இருக்கிறார்.

வியாக்ரபாதரை(புலிக்கால் முனிவர்) கண்டதும் அங்கிருந்த லிங்கத்தை வனங்கி முனிவர் தியானம் கலையும் வரை காத்திருக்கிறார். கண்விழித்த முனிவர் அந்த க்ஷத்ரிய இளவரசனின் குறைகளை கேட்டறிந்தார்.

அவர் உடனே அருகில் குழம்பலாக இருந்த குளத்தை காட்டி அந்த இளவரசனை குளிக்கும்படி கூறுகிறார். அது குழம்பலாக இருந்ததால் இளவரசன் தயக்குகிறான், ஆனால் அவருடன் வந்த நாய் அந்த குளத்தில் விழுந்து எழுகிறது.

குளத்தில் இருந்து வெளியே வந்த நாயை பார்த்த இளவரசனுக்கு ஒரே ஆச்சர்யம். அந்த சொறி நாயின் உடலில் இருந்த புண்கள் மறைந்து இருந்தது. இதை கண்ட இரண்ய வர்மன் தானும் சென்று குளித்து பொன்னிற மேனியாக மாறினான்.

இதற்கு இடையில் காணமல் போன இளவரசனை தேட கௌட தேச அரசன் தன் படைகளை அனுப்பி வைத்தான். அவர்கள் தேடி வந்து குனமாகி இருந்த இளவரசனை அழைத்து செல்கின்றனர்.

கௌட தேசத்திற்கு சென்ற இளவரசனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிகிறது. தனக்கு தில்லையில் தான் உடல்குற்றம் குனமானதால் மீண்டும் அந்த வனத்திற்கு வருகிறார்.

அதன்பிறகு வியாக்ரபாதரின் உத்தரவை ஏற்று நடராஜருக்கு ஆலயம் எழுப்புகிறார்.

அந்த இளவரசனுக்கு அத்தி மாலை சூட்டி, கையில் புலிக்கொடியை தந்து கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள பஞ்சாட்சர படியில் அமர வைத்து சோழ மன்னனாக முடிசூட்டுகிறார். அதன் பிறகு தில்லை வாழ் அந்தணர்களை அழைத்து வந்து நடராஜருக்கு சேவை செய்ய பணிக்கிறார்.

இரண்ய வர்மன் தான் முதல் சோழ மன்னன் என்று நாம் கோயில் புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. சோழர்களுக்கு மட்டுமே தில்லையில் முடிசூடும் உரிமை உள்ளது என்பதை கோயில் புராணம் மற்றும் கூற்றுவ நாயனார் புராணம் முலம் தெரிய வருகிறது.

இந்த ஸ்தல வரலாறை விளக்கும் ஓவியங்கள் இன்றும் மூலஸ்தானத்தின் பின்புறம் உள்ளன.

author avatar
Parthipan K