வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!

0
88

ஓட்டுக்கு பாலிலோ அல்லது சாமி மீதோ சத்தியம் செய்து பணம் வாங்கினால் பயப்படவேண்டாம் என்ற சீமான், அதற்கு பரிகாரமாக மஞ்சள் துண்டில் காசை கட்டி கோவில் உண்டியலில் போட்டால் சாமி குத்தமாகாது என பேசி அனைவரையும் வாயடைக்க செய்தார்.

தமிழகத்தில்  ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தொகுதி வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடனும், திமுக விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனும், மக்கள் நீதி மய்யம் சமத்துவ மக்கள் கட்சியுடனும் கூட்டணி சேர்ந்து களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களத்தில் இறங்குகிறது. இந்த நிலையில்   மதுரை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய சீமான், வருவோருக்கு அன்னமிடும் தமிழகள் பொங்கலுக்கு அரிசி, கரும்புகளை இலவசமாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, ஆதங்கப்பட்டு பேசிய அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்றும்,  அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிப்பேன் என்றார். திமுக, அதிமுக ஆட்சி அமைத்து தமிழகத்தை ஆண்டதை பார்த்து விட்ட மக்கள் ஒருமுறை நாம் தமிழருக்கு வாக்களித்து பாருங்கள் என வாக்கு சேகரித்தார்.

விவசாயம் செழிக்கவும், ஊழலற்ற ஆட்சி அமைக்கவும் நாம் தமிழகர் கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்ட சீமான், ஓட்டுக்கு சாசு வாங்கி கொண்டு பாலிலோ அல்லது சாமி மீதோ சத்தியம் செய்தால் பயப்பட வேண்டாம் என்றார். அளித்த சத்தியத்திற்கு பரகாரம் ஒன்றையும் கூறிய சீமான் வாக்காளர்களை வாயடைக்க செய்தார். அதாவது ஓட்டுக்கு ரூ.500 வாங்கினால் மஞ்சள் துண்டில் 5 ரூபாயை, அதேவே ரூ.1000 ரூபாய் வாங்கினால் ரூ.50 ரூபாயை மஞ்சள் துண்டில் கட்டி  உண்டியலில் போட்டால் எல்லாம் சரியாகி விடும் என்ற பரிகாரம் சரி ஆகி விடும் என்றதுடன் உங்களது வாக்குகளை மட்டும் விவசாய சின்னத்திற்கு போடுங்கள் என கேட்டுக் கொண்டார்.

author avatar
CineDesk