நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
64

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வு கூட நுட்புணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள்: 31

பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II)

மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் – Consolidated Pay அடிப்படையில்)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59

கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கும் வேதியல் அல்லது உயர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு kings institute of preventive medicines அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்கும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றெடுக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி,

எண்: 353, பெருந்திட்ட வளாகம்,

சிலுவம்பட்டி (அ),

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் – 637 003

கல்வித்தகுதி/சாதிச் சான்று/ஆதார் நகல் உள்ளிட்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பப் படிவத்தை 07.10.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.