தீ விபத்தில் சிக்கிய நாகினி நாடக கதாநாயகி! படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அவலம்!!

0
137

தீ விபத்தில் சிக்கிய நாகினி நாடக கதாநாயகி! படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அவலம்!!

பலரின் வீடுகளில் தற்பொழுது வரை சினிமா சீரியல் என்பது பலரது உள்ளத்தையும் கவர்ந்து வரும் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அதிகளவு மக்களை கவர்ந்த நாடகமாக நாயகி இருந்தது.

நாகமாக இருந்து பெண்ணாக உருமாறி காதல் வயப்படும் அந்த நாடகம் பெருமளவு ஹிட் அடித்து பலரது மனங்களையும் கவர்ந்தது.

குறிப்பாக அந்த சீரியல் கதாநாயகி மவுனி ராய் என்பவர் வட இந்திய கதாநாயகியாக இருந்தாலும் நமது தமிழ்நாட்டில் இந்த நாடகம் மூலம் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

தற்பொழுது இவர் நாடகங்களை விட்டுவிட்டு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்பவர் உடன் தீ விர்ஜின் ட்ரீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் பால திவாரி நடத்து வருகின்றனர்.

இன்று மவுனி ராய் அவருக்கான காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த செட் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீயானது மளமளவென பரவி காட்சி எடுத்துக் கொண்டிருந்த கேமரா உள்பட வெடித்து சிதறியது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தால் படப்பிடிப்பை மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த தீ விபத்தால் படத்தின் காட்சிக்காக போடப்பட்ட செட் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.