நானே வருவேன் படத்தின் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம்

0
79

நானே வருவேன் படத்தின் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம்

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு பிறகு நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கியுள்ள படமாக ‘நானே வருவேன்’ படம் உருவாகியுள்ளது. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்நிலையில் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு சென்சாரில் யூ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 2 மணிநேரம் 2 நிமிடம் மட்டுமே ஓடும் சிறிய படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நானே வருவேன் திரைப்படம் அண்ணன் தம்பி கதாபாத்திரங்களுக்கு இடையே உருவாகும் தேஜாவு பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஆளவந்தான் மற்றும் வாலி ஆகிய படங்களின் சாயல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை தமிழகத்தில் சில ஏரியாக்களில் தயாரிப்பாளர் தாணுவும், சில ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் வெளியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here