ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!

0
68

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!

சைக்கோ படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர்.  விமர்சனங்கள் இருந்தாலும் படம் நகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் முக்கிய குறையாக விமர்சகர்கள் சொல்வது ‘இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லை யா?  என்றும் கேள்வி எழுப்பினார். இது சமம்ந்தமாக சமூக வலைதளங்களில் கேலிகளும் மீம்ஸ்களும் உலாவர ஆரம்பித்தன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக மிஷ்கின் ‘படத்துல சிசிடிவி இல்ல. அதனால் என்ன இப்போ? தியேட்டர்ல கொலைகாரன் கொலை எப்படி பன்றான்னு பாக்காம? ஏன் சிசிடிவிய தேடுறீங்க. ஒரு கொலைகாரன் கொலை செய்யும் போதோ அல்லது கடத்தும் போதோ அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அப்புறப்படுத்திட்டுதான் செய்வான். அத நீங்கதான் புரிஞ்சிக்கணும்.’எனப் பதிலளித்தார்.

இதையடுத்து மீண்டும் ஒருமுறை இது சம்மந்தமாக விளக்கம் அளித்துள்ளார். நேற்று வால்டர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘என்னுடைய படங்களில் லாஜிக் இல்லை என்று சொல்கிறார்கள். ஏன் ராமாயணத்தில் கூடத்தான் லாஜிக் இல்லை. அடுத்தவன் மனைவியான சீதாவை ராவணன் கடத்திச் செல்வது என்ன லாஜிக்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மிஷ்கினின் இந்த பேச்சு இப்போது சமூக வலைதளத்தில் வைரலாக இது தொடர்பான மீம்ஸ்கள் வரும் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K