எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகத்தையும் மறந்து சர்வாதிகாரியை போல செயல்படுகிறார்! முன்னாள் எம்எல்ஏ போர்க்கொடி!

0
80

அதிமுகவில் எப்போது பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு குறைய தொடங்கி சட்டசபை உறுப்பினர்கள் முதல் சாதாரண கிளை செயலாளர் வரை அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்ப தொடங்கினார்களோ அந்த நொடியிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலாவின் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பினார்.

இதனால் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல இடங்களில் கருத்தை தெரிவித்து வந்தார்கள் அதாவது எடப்பாடி பழனிச்சாமி துரோகி என்றும் பன்னீர்செல்வம் விசுவாசி என்றும் தெரிவித்தார்கள்.

ஆனால் சசிகலா தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த விதமான எதிர்வினையும் மாற்றாமல் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அதன் விளைவாக கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாந்தை மறந்துவிட்டு சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆரம்ப காலம் முதலில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் தனியரசு சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்வதும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதுமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்கூட்டம் நடந்தது இதில் கரூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் தனியரசு பங்கேற்று கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அதிமுகவில் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சட்ட விதிமுறைகள் படி அ தி மு கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தான். ஆகவே அதிமுகவில் தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து பொதுக்குழுவை கூட்டி பன்னீர்செல்வத்தை வஞ்சிக்கும் விதமாக ஒற்றை தலைமை கோட்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார் என்று கூறியுள்ளார் தனியரசு.

தற்போது ஒற்றை தலைமை தொடர்பாக நீதிமன்றங்களை நாடி வருகின்றார்கள் இந்த நிலையில் தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. பன்னீர்செல்வத்தை போல சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நான் ஆதரவு வழங்குகிறேன். பிரிந்து கிடக்கும் நான்கு அணிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல அதிமுக மிகவும் வலுவான கட்சியாக காணப்படும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகம் ஆண்டு மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என்று தனியரசு குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனாலும் அதிமுக என்ற மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை மற்றொரு இயக்கத்தின் தலைவர் இப்படி விமர்சனம் செய்வதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? தனியரசு சசிகலாவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றால் தன்னுடைய இயக்கத்தை கலைத்துவிட்டு சசிகலாவின் பக்கம் நிற்க வேண்டும் அதை விடுத்து அவர் ஒரு தனி இயக்கத்தை நடத்தி வருகிறார் ஆனாலும் அதிமுகவின் தனிப்பட்ட விஷயத்தில் அவர் மூக்கை நுழைப்பது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.