அதிமுகவிற்கு திகிலூட்டும் கூட்டணி கட்சி!

0
63

கூவத்தூர் ரிசார்டில் நடந்தது என்ன என அந்த கூவத்தூர் ரிசார்டில் தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போன்ற பல நிர்வாகிகளுக்கும் நன்றாக தெரியும் தற்சமயம் அந்த ரிசார்டில் நடந்தது என்ன என்பதை நான் தெரிவிக்க மாட்டேன். அதை சொல்வதற்கு என்று நேரம் வரும் அப்பொழுது தெரிவிப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது .இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அந்த அமைப்பின் தலைவரும், சட்ட சபையின் உறுப்பினருமான, நடிகர் கருணாஸ் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட நான் இரட்டை இலை சின்னத்தில் சென்ற தேர்தலில் நின்றேன் அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாம் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

சசிகலா தன்னை முதல்வராக அறிவிக்கவில்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தண்ணி முதல்வராக ஆக்கியிருக்கிறார்கள் என முதலமைச்சர் தெரிவித்து வருவது சம்பந்தமான கேள்விக்கு பதில் தெரிவித்த கருணாஸ், கூவத்தூரில் நடந்தது என்ன என அங்கே இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போன்றவர்களுக்கு தெரியும். தற்சமயம் அங்கே என்ன நடந்தது என்பதை நான் தெரிவிக்க மாட்டேன். அதை தெரிவிப்பதற்கு நேரம் வரும் அந்த சமயத்தில் அதை தெரிவிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் கருணாஸ்.

சசிகலா விடுதலை ஆக வேண்டும், அவர் வெளியே வந்த பின்னர் அவருடைய மனதில் என்ன நினைத்து இருக்கிறார் என்று தெரிவிக்க வேண்டும். எங்களுடைய அமைப்பிற்கு அங்கீகாரம் கொடுத்து சென்ற சட்டசபை தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.அதில் சசிகலா பங்கு அளப்பரியது. அவர் விடுதலையான பிறகு அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை பொருத்தே என்னுடைய முடிவு இருக்கும் என்று கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.