தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் பரிசோதனை செய்ய வந்த டாக்டர்களை கல்லால் அடித்து வெறிச்செயல்!

0
95

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரை அரசு பரிசோதனைக்கு அழைத்துள்ளது, அதில் சிலர் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசின் உத்தரவை ஏற்று, இந்தூரில் உள்ள ஒரு இடத்தில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டோரை பரிசோதனை செய்ய மருத்துவ குழு சென்றுள்ளது. முதலில் ஒத்துழைக்க மறுத்த இவர்கள் பின்னர் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கல்லால் அடித்து விரட்டியுள்ளனர்.

மருத்துவர்கள் உட்பட அனைவரையும் கல்லால் அடித்து தாக்கியதால் உயிருக்கு பயந்த அக்குழுவினர் அங்கிருந்து தப்பித்து மருத்துவ முகாமுக்கு வந்துள்ளனர். அந்த மருத்துவக்குழுவுடன் சென்ற டாக்டர் ஒருவர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வரவில்லை என்றால் தாங்கள் உயிர் பிழைத்திருக்கவே முடியாது என்று தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

https://twitter.com/RightWing_India/status/1245402123954614272?s=19
author avatar
Parthipan K