ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

0
84

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

முருங்கைக்கீரையில் இருக்கும் சத்தானது மனிதனுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள், பால் மற்றும் முட்டை க்கு இணையாக புரதம் உடையது. ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய முருங்கைக் கீரையை ஏதாவது ஒரு வகையில் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது.

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நன்மையளிக்கும். ஆனால் கீரையை எடுக்க நேரமாவதால் சோம்பேறித்தனமாக அதனை விட்டு விடுகிறார்கள். ஒரு கட்டு கீரை கூட ஒரு நிமிடத்தில் நம்மால் சுத்தம் செய்து விட முடியும். முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொந்தரவை எதிராக செயல்படும்.

வாழைமரத்தை போல முருங்கையின் இலைகள் வேர் மற்றும் தண்டு பூ, காய், விதை ஆகிய அனைத்தும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. 20 அமினோ அமிலங்களில் 18 வகையான அமிலங்கள் முருங்கையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கால்சியம், வைட்டமின் சி, இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுவதால் உடல் பலம் பெறும்.

அத்துடன் ரத்த சோகையில் இருந்து விடுபட மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவராக இருந்தால் முருங்கைக்கீரையை சுத்தம் செய்வது மிகவும் கடினமாகும். முந்தைய நாள் இரவே முருங்கைகீரைகளை கடைகளில் வாங்கிவிடுங்கள். அதன் பின் வீட்டில் முருங்கை மரத்தை வளர்த்து வந்தாலும் முந்தைய நாள் மாலை வேளையில் ஒரு கட்டு கீரையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் இருக்கும் மஞ்சள் நிற இலைகளை மட்டும் தனியாக அகற்றிக் கொண்டு பின் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து அதில் முருங்கை கீரையை வைத்து சுற்றிக் கொள்ளுங்கள். அதை அப்படியே ஒரு ஓரமாக வைத்து விட்டு, மறுநாள் காலை எழுந்து பார்த்தால் இலைகள் தனியாகவும், குச்சிகள் தனியாக இருக்கும். நீங்கள் சுலபமாக குச்சிகளை மட்டும் தனியாக எடுத்து விட்டு கீரையை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளலாம். இதுவே முருங்கைக்கீரை ஆய்வதற்கு ஒரு நல்ல வழியாகும்.

author avatar
Jayachithra