100 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பறிபோன உயிர்!

0
59

மும்பை தகிசர் கனபத் நகரைச் சேர்ந்தவர் ராஜூ மெக்கானிக்கான இவர் தகிசர் கிழக்குப் பகுதியில் கேரேஜ் நடத்திவந்தார் இவரிடம் தகிசரை சார்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாயை கடனாக வாங்கியிருந்தார். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லையாம்.

சம்பவம் நடைபெற்ற அன்று ராஜு அவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கியவரின் உறவினரான பரமேஸ்வர் என்பவரை பார்த்திருக்கிறார். அவர் பரமேஸ்வரிடம் உறவினருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு பரமேஸ்வர் பணத்தை கொடுக்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ராஜு பாட்டில் அவரை அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, கோபமுற்ற வாலிபர் ராஜு பாட்டிலை வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

அதன்பிறகு உடலுக்கு தீ வைத்துவிட்டு மெக்கானிக் ராஜு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார். ஆனாலும் காவல்துறையினர் பிரேத பரிசோதனையில் மெக்கானிக் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார்கள்.

ஆகவே சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் 100 ரூபாய் தகராறில் மெக்கானிக்கை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் பரமேஸ்வரை கைது செய்தார்கள்.