பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?

பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.

அதே நேரத்தில் தங்களிடம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து திமுக படு தோல்வியை அடைந்தது அந்த கட்சியின் செயல்பாடு சரியில்லை என்றும்,மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் ரசிக்கபட வில்லை என்ற கருத்தும் வந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் முடிவில் அவருக்கு எதிராகவே அமைந்து விடுகிறது.சமீபத்தில் நடந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி வேட்டி உடுத்திய விவகாரம் முதல் இதற்கு முன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியது வரை அனைத்தும் அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்து விட்டு ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பஞ்சமி நிலம் குறித்த கருத்துக்கு பாமக நிறுவனர் எழுப்பிய கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் தேடி கொண்டிருக்கின்றனர்.

அசுரன் படம் குறித்து திமுக தலைவர் டிவிட்டரில் பதிவிட்ட கருத்து:

அந்த பதிவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை முதலில் திருப்பி தாருங்கள் என விமர்சனம் செய்ய அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் பட்டாவை வெளியிட்டு பதில் அளித்திருந்தார்.

மருத்துவர் ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டர் பதிவை விமர்சனம் செய்தது:

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல அது தனியாருக்கு சொந்தமான இடம் என பதிலை டிவிட்டரில் அந்த நிலத்திற்கு சொந்தமான பட்டாவை இணைத்து பதிவிட்டிருந்தார்.

கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஆண்டுகள் ஓரிடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய நிலையில் அதை ஆதாரமாக ஏற்று கொள்ளாமல் மூலப் பத்திரத்தை வெளியிடுமாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சார்பில் கேட்கப்பட்டது.

ஆனால் பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது மூலப் பத்திரத்தை வெளியிடாமல் மூலப் பத்திரத்தை காட்டினால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் என இருவரும் பதவி விலகுவார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மருத்துவர் ராமதாஸ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே நடந்து வந்த இந்த டிவிட்டர் விவாதத்தில் சம்பந்தமில்லாமல் அன்புமணி ராமதாஸ் அவர்களை பதவி விலக கேட்டதே அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஸ்டாலின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அடுத்து மூலப் பத்திரத்தை வெளியிட கேள்வி கேட்டவர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பாளர்களா? என்ற மலுப்பல் கேள்வி ஸ்டாலின் மீதான சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி பல முக்கிய செய்திகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையிலும் பாமக பஞ்சமி நிலம் குறித்த விமர்சனத்தை விடாமல் மீண்டும் அக்கட்சியின் தலைவர் G.K மணி மூலம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. நடந்து முடிந்த பல முக்கியமான நிகழ்வுகளால் இதை மறந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த திமுக தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இனி அனைத்து அரசியல் கட்சிகளும் திமுக தலைவர் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் மூலப் பத்திரத்தை வெளியிட கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.உண்மையிலேயே அந்த இடத்திற்கு மூலப் பத்திரம் என ஒன்று இருந்தால் அதை வெளியிட்டு விட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்ற சாட்டு பொய் என்று நிரூபிக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்கலாமே என்றும் கேள்விகள் வந்த வண்ணமே உள்ளன.

Copy
WhatsApp chat