திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

0
71

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது

இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பும் நடந்துள்ளது. இந்த அவமதிப்பை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கண்டித்து உள்ளதால் இந்த அவமதிப்பை செய்தது யார்? என்ற கேள்வி எழுந்து உள்ளது

இந்த நிலையில் திருவள்ளுவர் பிரச்சனைக்கு முடிவே இல்லாதவாறு இதன் வாக்குவாதம் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக பிரமுகர் முரளிதரராவ் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘திருவள்ளுவர் ஒரு துறவி என்றும் திமுக தலைவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை திமுக கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வழக்கம்போல் இந்த டுவீட்டிற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. முரளிதரராவின் இந்த டுவீட்டுக்கு விரைவில் திமுக தரப்பில் இருந்து பதிலடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
CineDesk