மும்பையில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.. காலை 9.30 மணி அளவில் போட்டி ஆரம்பமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், மும்பையில் கடந்த ஒரு சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார் 44 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், சுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

இதனையடுத்து களமிறங்கிய புஜாரா அஜாஸ் படேல் வீசிய 29.2 ஆவது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதே ஓவரில் கடைசி பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்த சூழ்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 196 பந்துகளை எதிர்கொண்டு தன்னுடைய நான்காவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி நேற்று 70 ஓவர்கள் ஆடி சுமார் 221 ரன்களை சேர்த்து இருந்தது. இதில் மயங்க் அகர்வால் மட்டும் சுமார் 246 பந்துகளை சந்தித்து 120 ரன்களை சேர்த்திருந்தார். கிட்டத்தட்ட 60 சதவீத ரன்களை மயங்க் அகர்வால் மட்டுமே எடுத்து இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்து இருக்கிறது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் விருத்திமான் சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். நியூசிலாந்து அணியின் சார்பாக அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Leave a Comment