கனமழையால் திணறும் மும்பை; ரெட் அலார்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

0
80

தென்மேற்கு பருவமழை சரியான சரியான காலகட்டத்தில் பொழிந்துள்ளதால் கேரளா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மும்பை நகரில் அடைமழை வெளுத்து வாங்கி வருவதால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கன மழை நீடிக்கும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை செய்யப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மும்பை நகரில் மழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

பெருமளவு கனமழை வாய்ப்புள்ள பகுதிகளாக மும்பை, தானே, ராய்கட், பால்கர், ரத்னகிரி ஆகிய இடங்கள் கூறப்பட்டுள்ளன. கடலோர பகுதிகள் 50 கிலோமீட்டர் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா இன்னொரு பக்கம் கன மழையின் சிக்கலான சூழலை மும்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

author avatar
Jayachandiran