சம்பளம் வாங்காத MS டோனி! – ‘தல’ எப்பவும் ‘தல’ தான்

0
114
Representative purpose only
Indian cricket team iconic player MS Dhoni

மகேந்திர சிங் டோனி, MS டோனி, தல, கூல் கேப்டன் என கிரிக்கட் ரசிகர்களின் மிகப்பெரிய நாயகனாக இருப்பவர் தான் நம் தல டோனி.

2004 ஆம் ஆண்டின் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ரசிக்க ஆரம்பித்த இவரை இன்றைய ஐபில் களிலும் ரசித்து கொண்டிருக்கிறோம்.

சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கட் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை வீரராக எவருமே இல்லாத காலகட்டத்தில், மத்த டீமுக்கு 10 எல்லாம் விக்கட் விழும் வரை ஆட்டம் இருக்கும் போது, இந்திய அணிக்கு மட்டும் 6 விக்கட்டுகளில் அத்தனையும் முடிந்து போனது. அதன் பின் யுவராஜ் சிங் வந்த பிறகு தான் 7 விக்கட் வரை நம்பிக்கையுடன் காத்திருக்க ஆரம்பித்தோம்.

இருண்டு இருந்த இந்திய அணியில் வந்து விழுந்த சூரிய வெளிச்சம் தான் நம் தல டோனி, அவர் வந்த பிறகே 9 விக்கட் விழுந்த பிறகும் எதிரணிக்கு பயம் இருந்து கொண்டே இருந்தது. டோனி களத்தில் ஆட்டம் ஆரம்பித்தால் எதிரணி ரசிகர்கள் கையெடுத்து கடவுளை கும்பிட்டனர்.

இவருடைய ஹெலிகாப்டர் சிக்ஸர்களை பார்க்கும் பொழுது, உடம்பெல்லாம் புல்லரித்து போகும்,இவரது தலைமையில் தான் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றது.அந்த தருணம் கிரிக்கட் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணி வீரர்களுக்கே உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை BCCI அறிவித்தது. மேலும் இதில் நம் தல டோனி இந்திய அணியின் ஆலோசகராக ஆலோசனை வழங்க சம்மதித்துள்ளார் எனவும், அதற்க்கு சம்பளம் அவர் வாங்கவில்லை எனவும் BCCI தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K