கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

0
61

நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற கல்லூரிகள் செயல்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் இணையதளம் மூலமாக கல்வியை கற்று வருகிறார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில், செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி இருக்கிறார்.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் செமஸ்டர் தேர்வு சரியான முறையில் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

பருவத் தேர்வில் 25 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர் பொன்முடி, மாணவர்களுக்கு மறுபடியும் இணையதளம் மூலமாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி. மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்று எண்ணும் மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதேசமயம் இணையதளம் மூலமாக தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.