இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து!

0
89
mpbs-medical-course-in-hindi-language-starts-in-this-state-indian-academy-of-medicines-principal-investigators-opinion

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கபடுகின்றது.

இதனையடுத்து மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் உள்ள ஆங்கில மொழியை மாற்றி இந்தியில் மட்டுமே தேர்வு நடக்கும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நம் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான மருத்துவ உயிர்வேதியியல் ,உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்கள் நேற்று வெளியிடப்பட்டது.இந்நிலையில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கூறுகின்றார்.இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே சென்று மேல்படிப்பு படிக்கவோ ஆராய்ச்சி நடத்தவோ முடியாது எனவும் கூறப்படுகின்றது.

author avatar
Parthipan K