உள்துறை அமைச்சரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கூறிய முக்கிய கட்சியின் நிர்வாகி! கடும்கோபத்தில் மத்திய அரசு!

0
88

அல்வா விற்கும் கதை ஒன்றை கூறுவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றார் உள்துறை அமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் துக்ளக் பத்திரிகையின் பாஜகவின் அப்போதைய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வந்திருந்தார்.

அந்தப் பயணம்தான் பாஜகவின் தலைவராக அரசியல் ரீதியாக தமிழகத்திற்கு அமித்ஷா முன்னெடுத்த முதல் பயணம்.

அதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்பு அது ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் கடந்த முறை அமித்ஷா முன்வந்தபோது கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் ஆனாலும் இந்த ஆலோசனை அல்லது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் இம்முறை முன்புபோல் கிடையாது விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி போட்டியிடும் நிலை இருப்பதால் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

அதோடு தமிழக பாஜகவின் தலைவர் உள்துறை அமைச்சரின் வருகை எதிர்க்கட்சியினருக்கு ஒரு பயத்தை கொடுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அல்வா விற்பனை போன்ற ஒரு கதையை சொல்வதற்காக தமிழகம் வருகின்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு முன்னர் பலமுறை தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் சிவகாசியில் நடைபெறும் பட்டாசு உற்பத்தியை உலக அளவில் விற்பனை செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டத்தில் எங்கள் கட்சியினர் குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்காக நிரந்தரமான உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.