வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?

0
78
Motorists shocked! Is customs duty high?
Motorists shocked! Is customs duty high?

 

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?

சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை  அமைப்பதற்கு  பயன்படுத்திய முதல்லீடை   திரும்ப பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை .அதற்குப் பின்னர் 40% சாலை பராமரிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு  முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களிடம்  சுங்கச்சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அந்த துண்டு பிரசுரங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலூர் சுங்கச்சாவடி 2016 ஆம் ஆண்டு வரை கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. வருடம் தோறும் ஜூலை மாதத்தில் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்பட  வேண்டும் எனவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னை ஒ எம் ஆர்  சாலையில் உள்ள நாவலூர்  சுங்கசாவாடிகளில்  கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறினார்கள்.

கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டண 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு கட்டணம் 78 ரூபாயிலிருந்து 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு கட்டணம் 350 ஆக விதிக்கப்பட்டுள்ளது இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Parthipan K