தென் ஆப்பிரிக்கா : அதிக ஆபத்தை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

0
117

தென்னாப்பிரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனவைரஸ் பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

C.1.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இந்த ஆண்டு மே மாதத்தில் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் அதி தீவிரமாக இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உடலுக்கு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்கும் திறன் படைத்ததாக இந்த வைரஸ்கள் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மற்ற கொரோனவைரஸ் களை காட்டிலும் இந்த வைரஸ்கள் அதிக பிறழ்வுகள் கொண்டதால் இந்த வைரஸ்களை கட்டுபடுத்துவது சவாலானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வைரஸ்கள் காங்கோ சீனா மொரிஷியஸ் இங்கிலாந்து நியூசிலாந்து போர்ச்சுக்கல் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K