7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்

0
61

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பலோம்பே  நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.  மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுபோல் கென்யா அதிகாரிகள், ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊர்டங்கின்  போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என  அறிவித்தனர், இதில் 150,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர்டங்கின் மூன்று மாதங்களில், 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டனர், இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர். கென்யா உலகின் மிக அதிகமான சிறுமிகள்  கர்ப்ப விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில்  82 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்
author avatar
Parthipan K