கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!

0
76
More data needed to allow coxsackie! World Health Center in addition to asking!
More data needed to allow coxsackie! World Health Center in addition to asking!

கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!

இந்தியாவில் கொரோனா காலத்தில் மக்கள் பெரும் தொற்றுக்கு ஆளாகி மிகவும் பாதிப்பை சந்தித்தனர்.மேலும் அதன் காரணமாக பலர் உயிர் இழந்தனர். எனவே அதை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பல செயல் படுத்தப்பட்டன. அரசும் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகளை அமல்படுத்தியது.

பல தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் இன்னும் கொவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதலில் மக்கள் ஊசி போடா பயந்தாலும் கோரோனாவிற்காக தாமாக முன் வந்து தற்போது செலுத்தி கொள்கின்றனர். ஆனால் கோவக்சினுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் மக்கள் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதில் கோவக்சின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி சட்டத்தின் கீழ் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுக்காக அங்கீகார பட்டியலில் சேர்க்கக்கோரி அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஆனால் இது வரை அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இந்த நிலையில் அந்த தடுப்பபூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் கோவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கூடுதல் தரவுகளை வழங்க வேண்டும் என நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இதனால் அந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் அந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து இறுதி மதிப்பீடு செய்வதற்கு நவம்பர் 3ஆம் தேதி மீண்டும் நிபுணர்கள் குழு கூட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.