வழக்கத்தை விட அதிகரித்த பருவமழை! விவசாயிகளை எச்சரித்த துணை வேந்தர்!

0
75

தமிழ்நாட்டில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 90 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக தெரிகிறது.

கோவை வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் ஆரம்பமானது இந்த மழை செப்டம்பர் மாதம் இறுதி வரையில் நீடிக்கும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மழையை விட அதிக அளவு மழை பொழிவு இருந்திருக்கிறது. தற்போது வரையில் 90% இயல்பை விட அதிகமாக மழை பெய்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

சராசரியான மழை அளவு 230 மில்லி மீட்டர் காணப்படும். ஆனால் இந்த வருடம் தற்போது வரையில் 438 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது பயிர்கள் பாதிக்கப்படாமலிருப்பதற்கு மழை நீர் வடிகால் அமைத்து விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் விவசாயிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 271 சதவீதம் மழை பெய்திருக்கிறது கோவை மாவட்டத்தில் 19 சதவீதம் மழை பெய்து இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.