போச்சி போச்சி எல்லாம் போச்சி! தேர்தல் ஆணையத்தில் கதறும் திமுக!

0
106

வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. அதோடு தேர்தல் ஆணையமும் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழகம் முழுவதிலும் தேர்தல் பறக்கும் படை வருமான வரித்துறை அதோடு துணை ராணுவ படை போன்றவற்றை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் அநேக இடங்களில் பணப் பட்டுவாடா செய்வது தடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்து இருக்கிறது. அதாவது வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி சார்பாக கூகுள்பே போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்கிற ரீதியில் அந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமை தேர்தல் ஆணையருக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.

அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டை நகல் களையும் அவர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டசபைத் தொகுதியில் பல பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு அவர்களுடைய அடையாள அட்டை எண் போன்றவற்றை வாங்கி வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு வாக்காளர்களுக்கு கூகுள் பே போன் பே போன்ற செய்திகள் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை கொண்டு வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்துவருகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினரை இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வங்கிப் பரிவர்த்தனை கைப்பேசி எண் போன்றவற்றை கண்காணித்து வருகிறது என்பதை அறியாத சிறு பிள்ளை போல திமுக தலைமை பேசிவருவது நகைப்புக்குரியதாக மாறியிருக்கிறது.தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து தமிழக அரசியல்வாதிகள் எல்லோரின் கைப்பேசியும் மற்றும் அவர்களுடைய பயணம் மற்றும் வங்கி பரிவர்த்தனை போன்றவற்றை தேர்தல் ஆணையம் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறது.இதைக் கூட தெரிந்து கொள்ளாத திமுக இப்படி ஒரு புகாரை தெரிவித்திருப்பது தமிழகம் முழுவதிலும் கேலிக்கூத்தாக மாறியிருக்கிறது.