அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

0
59
Mom restaurant closure? DMK's revenge power game!
Mom restaurant closure? DMK's revenge power game!

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அதிமுக வை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது.பல பிரமுகர்கள் அரசை ஏமாற்றி வெளியே சுற்றி கொண்டிருக்கும் வேளையில் அவற்றை கண்டு கொள்ளாமல்,அதிமுக வை மட்டும் திட்டமிட்டு படிப்படியாக பழிவாங்கி வருகிறது.பத்தாண்டுகள் ஆட்சியில் அமர முடியாமல் போனதால் தற்போது அதிகாரம் ஆட்டம் ஆடுவதாவும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அடாவடியாக கைது செய்துள்ளனர்.

இவரை போல பல பிரமுகர்கள் மக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளனர்.அவர்களை எல்லாம் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதையும் பெரிய குற்றச்சாட்டாக வைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி திமுக அதிமுக வின் திட்டங்களை படிப்படியாக மூடி வருகிறது.அந்தவகையில் முதலில் அம்மா மினி கிளினிக் மூடப் படாது என்றும் செயல்முறையில் இருக்கும் என்றும் திமுக அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறினார்.ஆனால் ஆட்சி அமைந்து 5 மாதங்கள் கடந்த நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் மூடப் பட்டுவிட்டது.அது உபயோகமற்று இருப்பதாக அதற்கான காரணத்தையும் திமுக அரசு கூறுகிறது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் 2வது நாள் நடைபெற்றது.அப்போது அமைச்சர் துரைமுருகன் அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன என்று கூறினார் .அதை வைத்து பார்க்கும் பொழுது திமுக அரசு அதிமுக வின் அனைத்து திட்டங்களையும் மூட திட்டமிட்டு வருகிறது.பாமர மக்கள் பயன் தரும் வகையில் உள்ள அனைத்து திட்டங்களையும் திமுக மூட திட்டமிட்டு வருகிறது.

இதனை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக அரசு துவக்கிய மக்களுக்கு உதவும் வகையிலான அனைத்து திட்டங்களும் மூட திமுக அரசு திட்டமிட்டு வருவதாக கூறினார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் அவர்கள்,நீங்கள் ஆட்சியில் இருந்த போது திமுக வின் அனைத்து திட்டங்களையும் அவற்றியதால் தான் தற்போது ஆட்சியை இலந்தீர்கள் என்று கூறியுள்ளார்.இவர் கூறுவதை பார்த்தல் அதிமுக ஆட்சியில் இருந்த போது திமுக இயற்றிய திட்டங்களை மூடியதால் தற்பொழுது திமுக அரசு பதிலடி கொடுக்கும் விதத்தில் பழி வங்கி வருவதாக கூறுகின்றனர்