மோடியின் புகழாரம்! மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்?

0
114

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஏனெனில் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சீர்திருத்த மசோதா  திட்டத்தை எதிர்த்து அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரதமர் மோடி விவசாய சீர்திருத்த மசோதா திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது விவசாய மசோதாக்கள் விவசாயம் செய்யும் மக்களுக்கு பயனளிக்காத ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளான பாரதிய கிசான் சங்கம் தெரிவிக்கிறது.

மேலும் இந்த விவசாய மசோதாக்கள் பெரும்பாலும் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவளிக்கும் என்றும் விவசாயிகளுக்கு அதனால் எந்த நன்மையும் நடக்காது என்பதனையும் பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவசாய சீர்திருத்த மசோதா சட்டம் தேவையில்லை என்று  நாடு அளவில் இருக்கும் விவசாய மக்கள் சுமார் 50,000 பேர் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் பிற ஆர்.எஸ்.எஸ் சங்கங்களுக்கும் இந்த முடிவு குறித்து தெரியப்படுத்தி உள்ளனர் என்பதும் இச்சட்டம் வேண்டாம் என்று கிராம குழுக்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K