“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒளவையார் வரிகளை உச்சரித்த நரேந்திர மோடி! அடிக்கடி தமிழில் பேசும் காரணம் என்ன..!!

0
97

“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒளவையார் வரிகளை உச்சரித்த நரேந்திர மோடி! அடிக்கடி தமிழில் பேசும் காரணம் என்ன..!!

நாட்டு மக்களிடையே உரையாட மோடி வகுத்த புதிய வழிமுறைதான் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி. இதில் கலந்து கொண்டு பேசி நரேந்திர மோடி கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் அற்புத வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

நம் நாட்டு இளைஞர்கள் அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக பேசினார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையும்
மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துரையாடுவார். தொடர்ந்து பேசிய மோடி, நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே மதிப்புமிக்க பொக்கிஷமாக விளங்குகிறது என்று கூறினார். இளைஞர்களின் தொழில்நுட்ப திறனில் மேம்பட்டு வருகின்றனர்.

சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவியபோது குழந்தைகளின் மகிழ்ச்சியை காண முடிந்தது என்றும் நினைவு கூறினார்.
மேலும், ஸ்ரீ ஹரிகோட்டாவில் விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை 10,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

இதையடுத்து, கேரள பெண்மணி ஒருவர் 10 வயதில் கைவிட்டு தற்போது 105 வது வயதில் மீண்டும் தொடர்ந்து, நான்காம் நிலை தேர்வில் 75% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதை பெருமைபடுத்தும் விதமாக பேசினார். இந்திய விமான படைக்கு சொந்தமான என 32 ரக விமானம் குஷோக் பகுலா ரிம்போக்கி விமான நிலையத்தில் இருந்து ஆரம்பத்தை துவங்கியது வரலாறாகியது என்றும், இந்த போர் விமானத்தில் 10% உயிரி எரிபொருள் உகயோகபடுத்தியதையும் குறிப்பிட்டு பேசினார். டிஜிட்டல் இந்தியாவில் நமது பெண்கள் சவால்களை திடமாக தங்களின் கைகளில் எடுத்துக் கொள்வதாக புகழ்ந்து பேசினார்.

ஏற்கனவே சில இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேசியதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran