பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!   

0
78
Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!
Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!

தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க முயல்வதில்லை என்ற நோக்கில் சமூக வலைத்தள பக்கத்தில் #Resign Modi என்று உருவாக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கானது   பெருமளவில் வைரலானது.அந்த பக்கத்தின் கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமின்றி இந்த ஹேஷ்டக் ஆனது டிவிட்டரில் தேசியளவில் வைரலானது.சிலர் இதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டனர்.மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட வாக்கு பதிவின் போது நரேந்திரமோடி பதவி விலக வேண்டுமென்ற ஹேஷ்டேக் டிரெண்டானதால் திடீரென்று அது காணமல் போனது.அது நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று அமரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிகை கட்டுரை ஒன்றில் வெளியிட்டுள்ளது.ஆனால் மத்திய அரசு நாங்கள் எந்த வித கண்டனங்களையும் அந்நிறுவனத்திற்கு கூறவில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது.

மக்கள் நலனுக்காகத்தான் அனைவரும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம்.அந்தவகையில் மக்களுடன் சேர்ந்து ஊடகங்களும் கொரோனாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்று விளக்கம் அளித்தார்.அதுமட்டுமின்றி மத்திய அரசு பேஸ்புக் மற்றும் வாட்சாப் ஊழியர்களை கைது செய்யப்போவதாக வால்ஸ்ட்ரீட் பத்திரிகை அவதூறு பரப்பியதையும் சுட்டிக்காட்டினார்.அதேபோல மோடியின் ஹேஷ்டேக் தவறுதாலாக நீக்கப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.சிறிது நேரத்தில் அத்தவறு திருத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.