மத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் வியூகத்தை விவரித்தார் மோடி!!

0
119

மத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் பின்னணியை விவரித்தார் மோடி!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார். 

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. 

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரோ ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து வெளியிட்டார். இதன் மூலம் 35 ஏ சட்டப்பிரிவும் தானாக வெளியேறியது. 

அத்துடன் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பின்வாங்கி , அது லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாகவும் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று (ஆக.8) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் தொலைக்காட்சி மூலம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது ஏன் ஆகியவை குறித்து அவர் விவரித்தார் .

சுமார் 40 நிமிடங்களுக்கு மோடி ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இதோ…

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு சட்டப்பிரிவு 370 தடையாக இருந்தது. இந்தச் சிறப்பு சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்காக காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இதன் மூலம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.

சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பல கோடி இந்தியர்களின் கனவுகள் இச்சட்டப் பிரிவை நீக்கியதன் மூலம் நனவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இப்போது தேசத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும் ஒன்றே; பொறுப்புகளும் ஒன்றானவை.

காஷ்மீரில் பாகிஸ்தான் சிலரைத் தூண்டிவிட்டதால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. சுமார் 42,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

சஃபை கரம்சரிஸ் சட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் பொருந்தும், ஆனால் ஜம்மு-காஷ்மீர் துப்புரவு தொழிலாளர்களுக்கு அது பொருந்தவில்லை. பிற மாநிலங்களில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனால் காஷ்மீரில் இல்லாமல் இருந்தது.

சட்டப்பிரிவு 370ஐ அகற்றுவதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமைகள் மேம்படும்.

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது தற்காலிகமானது. நிலைமை முழுவதும் சீரடைந்ததும் காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்துக்கு மாற்றப்படும்.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் மக்களால், சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இப்போது இந்த நிலைமை மாறும்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்குகின்றன.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகளை இனி காஷ்மீரில் நடத்த முடியும்.

லடாக் மூலிகை வளங்களை சந்தைப்படுத்துவது மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்.

லடாக்கில் மிகப் பெரிய சூரிய மின்சக்தி மையம் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தி லடாக்கை புதிய பாதைக்கு அழைத்து செல்வோம்.

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீர் தயாரிப்புகளை உலகமெங்கும் பிரபலப்படுத்தி ஊக்குவிக்க அனைத்து தொழில்நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய நடவடிக்கைகள் மூலம் ஜம்மு-காஷ்மீரை தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திலிருந்து விடுவிப்போம்.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் புதிய ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தனது உரையை முடித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K