தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! சசிகலாவுக்கு செக்!

0
69

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை விமானம் மூலமாக சென்னை வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. பிரதமர் சென்னையில் பங்கேற்கின்ற நிகழ்ச்சி வெறும் 3 மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது ஆனாலும்கூட அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக  அடையாறு ஐ எம் எஸ் விமான படை தளத்திற்கு வர இருக்கின்றார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கின்றார். அந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யும் ஒரே காரில் பயணிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் கிரீன் ரூம் என்று சொல்லப்படும் உள்ளறை ஒன்று இருக்கிறது. அந்த அறையில் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், போன்றோர் ஒன்றாக அமர்ந்து ஒரு சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சசிகலா குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற ஒரு மாதத்திற்கும் அதிகமாக பொது இடங்களில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றார். ஆனாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் இதுவரையில் சசிகலா விடுதலை தொடர்பாகவும், அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதன் மூலமாக அவர் சசிகலாவிற்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியான நாளை பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர், மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஒன்றாக ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். முன்னரே அமித்ஷா சென்னை வந்த சமயத்தில் லீலா பேலஸ் சொகுசு விடுதியில் இருவரும் ஆலோசனை நடத்தியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.