தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

0
67

திட்டமிட்டது போலவே அகமதாபாத்தில் இருக்கின்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில் அந்த ஆய்வை அவர் இன்றைய தினம் மேற்கொண்டு இருக்கின்றார் அதற்காக அவர் அகமதாபாத்தில் இருக்கின்ற ஜைடஸ் பயோடெக் பூங்கா ஹைதராபாத்தில் இருக்கின்ற அபாரத் பயோடெக் மற்றும் புனேவில் இருக்கின்ற சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி இருக்கின்றார்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது இந்த உயிர்க்கொல்லி வைரஸிலிருந்து வெளிவர முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் தவித்து வருகின்றன இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தி வருகின்றார்கள். அந்த வகையிலே இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா ஆகிய நிறுவனங்களும் இணைந்து கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை தயாரித்து இருக்கின்றன இந்த தடுப்பூசியை புனைவை சார்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையை பெற்று இருக்கின்றது. இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவில் 15 நகரங்களில் கோவி சில்டு தடுப்பூசி பரிசோதனை நடத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கோவிஷீல்ட் மூன்றாம் கட்ட பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது இதற்கிடையே மூன்றாம் கட்ட பரிசோதனையை அதிரடியாக வெளியிட்டிருக்கின்றது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி 80% ஆற்றல் மிக்கது எனவும் இது மனிதர்களுக்கு செலுத்தும்போது 90% வரை பலன் அளிக்கின்றது என்றும் தெரிவித்திருக்கின்றது. இந்தநிலையில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வளர்ச்சி அதோடு அதன் செயல் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்யும் பொருட்டு பிரதமர் மோடி இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் போய் சேர்ந்தார் அங்கே சங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கின்ற ஜைடில் காடிலா என்ற நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கின்றார்.

அங்கே தடுப்பூசி பணிகளை பார்வையிட்டார் அங்கே அந்த நிறுவனம் தயாரிக்கும் ஜைகோவ்டி என்ற தடுப்பூசியின் இரண்டாவது கட்ட பரிசோதனை குறித்து விஞ்ஞானிகளும் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருக்கின்ற கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹைதராபாத்தில் இருக்கின்ற கோவிஷீல்ட் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனங்களிலும் அவர் ஆய்வு செய்ய இருக்கின்றார்.