இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!

0
76

இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!

இன்று இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் எல் கே அத்வானி. ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் தான் இந்த அத்வானி. பாஜகவின் வளர்ச்சிக்காக பல வருடங்களாக உழைத்து வந்தவர். இவருடைய ரத யாத்திரைகளால் நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரம் தோன்றி ரத்த ஆறுகள் ஓட தாமரை மலர்ந்து கொண்டு வந்தது.

இந்திய அரசியலை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் பாஜகவின் தலைமை நிர்வாகியாகவும் கடந்த 2014 ஆம் ஆண்டு வரையில் செயல்பட்ட இவருடைய முக்கியத்துவம் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் வருகைக்குப் பிறகு குறைய தொடங்கியது. இன்னொரு புறமும் வயது முதிர்வு காரணமாக கட்சி அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதை படிப்படியாக குறைத்துக் கொண்ட அதுவா நீ தொலைக்காட்சிகளிலும் தோன்றவில்லை.

ஆனால் தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் மற்றும் சுதந்திர தினம் குடியரசு தினங்களின் போது அத்வானி தொலைக்காட்சிகளில் தோன்றுவது வழக்கம் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளன்று நேரில் சென்று வாழ்த்துவது வழக்கம். அந்த விதத்தில் இன்று தன்னுடைய 95வது பிறந்த நாளை அத்வானி கொண்டாடி வருகிறார்.

ஆகவே டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்க்கும் சென்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது. மோடியை பார்த்தவுடன் அத்வானி அதே உற்சாகத்துடன் சிரித்து பேசி மகிழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அத்வானி பொதுச் செயலாளராக இருந்த ஜன சங்கம் கட்சி கலைக்கப்பட்ட பிறகு 1980 ஆம் வருடம் அடல்பிகாரி வாஜ்பாய் உடன் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினார். தற்போது பாஜகவில் மோடி அமித்ஷா சொல்லித்தோர் இணை அசைக்க முடியாத சக்தியாக இருப்பதைப் போல அப்போது அந்த கட்சியில் அசைக்க முடியாத இருவரும் தலைவர்களாக அடல் பிகாரி வாஜ்பாயும், அத்வானியும் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அவசர வேலையை இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய பின்னர் காங்கிரஸ் கட்சி மீது பல அதிருப்தியின் காரணமாக, மொரார்ஜி தேசாய் தேர்தலில் வென்று பிரதமராக பதவி ஏற்க அவருடைய அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக பதவி ஏற்று முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார் அத்வானி.

அதேபோல 1996 ஆம் வருடம் மற்றும் 1998 உள்ளிட்ட ஆண்டுகளில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர் எல் கே அத்வானி அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அத்வானி தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.