தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
60

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவிக்கும்போது, வடகிழக்கு பருவ காற்றின் தாக்கம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனைய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலும் வறண்ட நிலையில் இருக்கும் என கூறியிருக்கிறார். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கடல் பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். ஆகவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.