அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
64

பங்குனிமாதம் பிறந்ததிலிருந்து தற்போது வரையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது தற்சமயம் மழை பெய்து வந்தாலும் யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற கதையாக தான் இருக்கிறது. தற்போது பெய்து வரும் மழை. அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தற்போது சித்திரை மாதம் நடைபெறுவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்தது.

இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதாவது தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவாரூர். உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை செய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.