10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்ட்ராய்ட் ஃபோன்

0
85

கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பள்ளிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அனேகமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கருதப்படுவதால் தனியார் பள்ளிகள் ஏற்கனவே காணொளி காட்சி மூலம் வகுப்புகளை துவங்கி விட்டன. தமிழக அரசு ஏற்கனவே வீட்டிலிருந்த படியே மாணவர்கள் படிக்க ஏதுவாக சில ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு அலைபேசி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 9ம் வகுப்பிலிருந்து 10ம் தேர்ச்சி பெற்றுள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5000 பேருக்கு, ரெட்மி நோட் 5 அலைபேசியை வழங்கியுள்ளது. இதே போல் அடுத்து 11 மற்றும் 12ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கும் அடுத்த வாரம் முதல் இந்த அலைபேசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள் வீடுகளில் அதிக நேரம் அலைபேசிகளை பயன்படுத்தி வருவதை ஆசிரியர்கள் கண்டித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு அலைபேசியை வழங்கியிருப்பது அவர்களை படிப்பிலிருந்து கவனத்தை திசை திருப்பும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் பயிற்றுவிப்பதற்காகவே அலைபேசியை வழங்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.

author avatar
Parthipan K