இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

0
180

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதே போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என சாந்தன், முருகன், நளினி , ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்பளித்தது. இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்று கொள்ளாமல் இருந்ததற்கு பல தரப்பில் இருந்தும் கண்டணங்கள் வெளிவந்தன. இது குறித்து மக்கள் நீதிமய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் 6 பேர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது